தமிழ்நாடு

மின் கட்டண வசூல் சர்ச்சை.. ஆதாரத்துடன் அதிமுக-ஐ கதறவிட்ட செந்தில் பாலாஜி!

Published

on

கொரோனா ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டது எனச் சர்ச்சை எழுந்து இருந்தது. அதுகுறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “2020 ஜூலை மாதம் வீட்டு உபயோக மின்சாரம் 3,023 மில்லியன் யூனிட்கள். கட்டண வசூல் 789 கோடி ரூபாய். அதுவே 2021 ஜூலை மாதம் 4494 மில்லயன் யுனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது. ஏறத்தால 50 சதவீதம் மின்சாரம் பயன்பாடு அதிகரித்துள்ளது. அப்படிப்பட்ட சூழலில் மின் கட்டண வசூல், 869 கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது நடப்பு ஆண்டு ஜூலை மாதத்தில் 1471 மில்லியன் யூனிட் மின்சாரம் கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் வசூல் வெறும் 80 கோடி ரூபாய் மட்டுமே. 2020 ஜூலை மாதத்தில் ஒட்டுமொத்தமாக 5181 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு 2784 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டது. 2021 ஜூலை மாதம் 7660 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தியும், 3,279 கோடி ரூபாய் தான் மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 1479 மில்லியன் யூனிட் மின்சாரம் கூடுதலாகப் பயன்படுத்தியும் 495 கோடி ரூபாய் மட்டுமே கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கல் வீட்டில் உள்ள நிலையில், அதற்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டதன் பேரில், கூடுதல் மின்சாரக் கட்டணத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் பார்த்தோம். ஏறத்தால 250 பேர் மின் கட்டணம் குறித்துப் பதிவிட்டு இருந்தார்கள். அதில் 50 பேர் தான் மின் இணைப்பு எண்ணைப் பதிவிட்டு இருந்தார்கள். சம்மந்தப்பட்ட வீட்டிற்கு துறை சார்ந்த அதிகாரிகள், பொறியாளர்கள் நேரடியாகச் சென்று கணக்கெடுத்துக் காண்பித்த போது அதை தவறு என ஒப்புக்கொண்டார்கள்.

இயக்குனர் மற்றும் நடிகர் தங்கர்பச்சன் சமுக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தார். அவரது வீட்டிற்கு அதிகாரிகள் நேரடியாகச் சென்று கணக்கு எடுத்துக் காண்பித்த போது மன்னிப்பு கேட்டுவிட்டனர். இப்படி ஒவ்வொரு நிலையிலும் தவறான சித்தரிப்பைச் செய்யச் சமுக வலைத்தளங்களில் கருத்துகள் செல்வதால் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட முடியாது.

முதல்வரை பொருத்தவரையில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். மின் கட்டணம் செலுத்த மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டன. சென்ற ஆட்சி போல 1 வாய்ப்பு அல்ல. சென்ற வருட ஜூலை மாத கட்டணம், முந்தைய மாத கட்டணம் அல்லது மின் மீட்டாரைப் புகைப்படம் எடுத்து அனுப்பி அதைக் கணக்கிட்டு கட்டணம் செலுத்துவது என 3 வாய்ப்புகள் வழங்கப்பட்டது. 3 வாய்ப்புகளையும் பயன்படுத்து 16 லட்சத்து 69 ஆயிரம் நபர்கள் கட்டணத்தைத் திருத்தி செலுத்தியுள்ளனர்.

எனவே மின்கட்டணம் அவர்களது பயன்பாட்டுக்கு ஏற்றவாறுதான் கணக்கிட்டுச் செலுத்தப்படுகிறது. இன்னும் மின் கட்டணத்தில் திருத்தம் இருக்கிறது என்று சுட்டிக் காட்டினால் நேரடியாக சம்மந்தப்பட்டவர்களின் வீட்டிற்கே சென்று அது கணக்கிட்டுத் தீர்வு காணப்பட வேண்டும் என்பது முதல்வரின் கண்டிப்பான உத்தரவு இது. எனவே குறைகள் இருந்தால் என்னிடம் சுட்டிக்காட்டுங்கள். அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்” என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version