தமிழ்நாடு

‘அரவேக்காடு பகுதி நேர அரசியல்வாதி கமலே…’- மய்யத்தின் குற்றச்சாட்டுக்கு செந்தில் பாலாஜி பதிலடி! 

Published

on

திமுகவின் கரூர் மாவட்டப் பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான செந்தில் பாலாஜி, மணல் கொள்ளைக்கு ஆதரவாக பேசிவிட்டார் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு செந்தில் பாலாஜி, தற்போது பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார். 

முன்னதாக கமல், ‘தேர்தலில் வென்ற மறு நிமிடம் ஆற்று மணல் கொள்ளையைத் துவங்கி விடுவோம் என்கிறார் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி. எங்கள் பெருந்துறை வேட்பாளர் நந்தகுமார் மணல் கொள்ளையை எதிர்த்து நீதிமன்றம் சென்று வாதாடி வென்றவர்.

அதன் காரணமாக கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான பின்னும் அஞ்சாமல் மக்கள் பணி செய்பவர். இதுதான் கழகங்களுக்கும் மநீமவிற்கும் உள்ள வித்தியாசம்’ என்று கூறினார். 

இதற்கு செந்தில் பாலாஜி, ‘கரூர் மாவட்டத்தில் 15,000 மாட்டுவண்டி விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக, ஆளுங்கட்சி அமைச்சரின் எதேச்சதிகார அடக்குமுறையை எதிர்த்து, என் மாவட்ட மக்களின் குரலாக, என் குரல் எதிரொலித்ததை கண்டு பகுதிநேர அரசியல்வாதிக்கு ஏன் கோபமும் பதட்டமும் வருகிறது?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

seithichurul

Trending

Exit mobile version