தமிழ்நாடு

ரூ.4 லட்சம் கோடி என்ன ஆச்சு..?- எடப்பாடியை சாடும் செந்தில் பாலாஜி

Published

on

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல இடங்களில் மின் வெட்டுப் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இது குறித்து அதிமுக தரப்பு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருவதும், அதற்கு தமிழக ஆளுங்கட்சியான திமுக எதிர் கருத்து வைப்பதும் தொடர்ந்து வருகிறது.

குறிப்பாக தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘அதிமுக ஆட்சியின் கடைசி காலக்கட்டத்தல் எந்த வித மின் பராமரிப்புப் பணிகளும் நடைபெறவில்லை. குறிப்பாக கடந்த 10 மாதங்களில் எந்தப் பணிகளும் நடக்கவில்லை. இதனால் அப்போது செய்ய வேண்டிய பராமரிப்புப் பணிகளையும் சேர்த்து இப்போது பார்த்து வருகிறோம். ஒரு சில நாட்களில் போர்க் கால அடிப்படையில் பணிகள் நிறைவேற்றப்பட்டு மின் தடை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு விளங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

இதற்கு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, குற்றச்சாட்டுகளை மறுத்து திமுக மீது குறை கூறினார்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘கடந்த ஆட்சியில் மின்சார வாரியத்திற்கு ஒதுக்கப்பட்ட 4 லட்சம் கோடி ரூபாயில் என்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது?’ என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பி உள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version