தமிழ்நாடு

திமுகவில் இணைந்தது ஏன்?.. செந்தில்பாலாஜி பரபர விளக்கம்!

Published

on

சென்னை: திமுகவில் இணைந்தது ஏன், அமமுகவில் இருந்து விலகியது ஏன் என்று செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி இன்று திமுகவில் இணைந்துள்ளார். அவர் தனது ஆதரவாளர்கள் 1000 பேருக்கும் அதிகமானோருடன் இன்று திமுகவில் இணைந்துள்ளனர்.

அதில், தொண்டர்களை அரவணைத்து செல்லும் தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின். திமுக தலைவர் ஸ்டாலினை சிறந்த தலைவராக பார்க்கிறேன். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் நான் ஒரு இயக்கத்தில் இருந்தேன். திமுக மீதான ஈர்ப்பால் தற்போது திமுகவில் சேர்த்துள்ளேன். மக்களின் விருப்பம் நான் திமுகவில் இருப்பதுதான்.

இபிஎஸ் – ஓபிஎஸ் அரசு மக்களுக்கு எதிராக செயல்படுகிறது. மக்களுக்கு எதிரான செயல்களை அதிமுக செய்து வருகிறது. மத்திய அரசுடன் சேர்ந்து அதிமுக தமிழக  மக்களை வஞ்சிக்கிறதை  திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக அரசுக்கு எதிராக போராடி வருகிறார்.

திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக்குவேன். மக்கள் திமுகவிற்கு வாக்களிப்பார்கள், அதிமுகவை அகற்றுவார்கள். என் அரசியல் பயணம் ஸ்டாலின் தலைமையில்தான் தொடங்கியது. ஸ்டாலின் மூலம் என் அரசியல் பயணம் வெற்றிபெறும் என்று நம்புகிறேன. கரூரில் உள்ள நாடாளுமன்ற சட்டமன்ற தொகுதிகள் அனைத்திலும் திமுகவின் வெற்றிக்காக பாடுபடுவேன். எந்த தேர்தல் வந்தாலும் திமுகவிற்காக பாடுபடுவேன்

author avatar
seithichurul

Trending

Exit mobile version