தமிழ்நாடு

மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து! அதிரடி உத்தரவு!

Published

on

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதாக சற்றுமுன் சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கை சென்னை நீதிமன்றம் சற்றுமுன் ரத்து செய்து உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது வேலை வாங்கித்தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது..

இதனை அடுத்து அந்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது வழக்கு செய்யப்பட்டு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கை ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் செந்தில்பாலாஜி தான் வாங்கிய பணத்தை திருப்பி தந்து விட்டதாக புகார்தாரர்கள் கூறியதை அடுத்தே வழக்கு ரத்து செய்யப்பட்டதாக சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது இதனை அடுத்து உயர் நீதிமன்ற உத்தரவின் நகலை தாக்கல் செய்ய செந்தில்பாலாஜி தரப்புக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version