இந்தியா

தவறான UPI ஐடிக்கு பணம் அனுப்பப்பட்டதா? உடனே என்ன செய்ய வேண்டும்?

Published

on

இருப்பினும் சில சமயம் தவறான UPI ஐடிக்கு பணம் அனுப்பப்படும் சூழல் ஏற்பட்டால், அந்த பணத்தை திரும்பப் பெற நீங்கள் செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

UPI மூலம் தவறான அக்கவுண்டுக்கு பணம் அனுப்பிவிட்டால் உடனே RBIயின் பணம் செலுத்தும் சேவை அதிகாரியிடம் புகாரளிக்க வேண்டும். நீங்கள் பணத்தை GPay, PhonePe, Paytm அல்லது UPI ஆகிய எந்த செயலி வழியாக அனுப்புனீர்கள் என்பதையும் தெரிவிக்கவும். சேவை அதிகாரி உங்கள் பிரச்சனையை எளிதில் தீர்த்து தருவார்.

ஒருவேளை UPI செயலியின் வாடிக்கையாளர் சேவை அதிகாரியின் உதவி கிடைக்கவில்லை நீங்கள் NPCIயில் புகார் அளிக்கலாம். NPCI அதிகாரப்பூர்வ இணையதளமான npci.org.in என்ற இணையதளத்திற்கு சென்று ‘What we do டேப்’ என்பதைக் கிளிக் செய்து பின்னர் UPI என்பதை க்ளிக் செய்ய வேண்டும், பின்னர் புகார் பிரிவின் கீழ், UPI பரிவர்த்தனை ஐடி, விர்ச்சுவல் பேமெண்ட் முகவரி, மாற்றப்பட்ட தொகை, பரிவர்த்தனை தேதி, மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் ஆகிய விபரங்களை குறிப்பிட வேண்டும். புகாருக்கான காரணம் ‘தவறாக வேறொரு கணக்கிற்கு மாற்றப்பட்டது’ என்பதைத் தேர்ந்தெடுத்து உங்கள் புகாரை சமர்ப்பிக்க வேண்டும்

மேலே உள்ள அனைத்து செயல்முறைகளையும் பின்பற்றிய பிறகும் நீங்கள் அளித்த புகாருக்கு நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தால், 30 நாட்களுக்குப் பிறகு நீங்கள் வங்கி குறைதீர்ப்பாளரை அணுகலாம்.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான குறைதீர்ப்பாளருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தால், நீங்கள் அளித்த புகார் சேவை வழங்குநரின் கிளை அல்லது அலுவலகத்திற்கு அனுப்பி உங்கள் பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

seithichurul

Trending

Exit mobile version