இந்தியா

ரஷ்யா – உக்ரைன் போர் எதிரொலி: சென்செக்ஸ் 2,070 புள்ளிகள் சரிவு

Published

on

உக்ரைன் மீது ரஷ்யா இன்று தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில் இந்திய பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. சற்றுமுன் வரை 2000 புள்ளிகள் சென்செக்ஸ் குறைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே உக்ரைன் – ரஷ்யா போர் மூளும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் பங்கு சந்தையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது என்பதும் ஒரு சில வாரங்களில் கிட்டத்தட்ட 7000 புள்ளிகள் சென்செக்ஸ் இறங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் இன்று காலை முதல் ரஷ்ய ராணுவம் உக்ரைனை தாக்க தொடங்கி விட்டதை அடுத்து இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் வரை குறைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கான ரூபாய்களை இழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

சற்றுமுன் வரை மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 2000 புள்ளிகள் சரிவடைந்தது 55200 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் நிப்டி 600 புள்ளிகள் சரிந்து 16 ஆயிரத்து 400 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது.

விரைவில் ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வராவிட்டால் பங்குச் சந்தைஇன்னும் கடும் சரிவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version