பர்சனல் ஃபினான்ஸ்

மூத்த குடிமக்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. 9% வட்டி விகித லாபம் வழங்கும் பிக்சட் டெபாசிட் திட்டங்கள்!

Published

on

ஆர்பிஐ இந்த ஆண்டு மே மாதம் முதல் தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருவதால், வணிக வங்கிகளும் தங்களது பிக்சட் டெபாசிட் மற்றும் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதங்களை உயத்தி அறிவித்து வருகின்றன.

அப்படி பிக்சட் டெபாசி திட்டங்களில் மூத்த குடிமக்களுக்கு, 9% வரை வட்டி விகித லாபம் வழங்கும் வங்கிகள் மற்றும் அதன் திட்டங்கள் பற்றி இங்கு விளக்கமாக பார்க்கலாம்.

யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் பாங்க்

யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் பாங்க் ரெகுலர் வாடிக்கையாளர்கள் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது 4.5% முதல் 8.50% வட்டி விகிதம் வழங்குவதாக அறிவித்துள்ளது.

மூத்த குடிமக்கள் 181 முதல் 501 நாட்கள் வரை, யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் பாங்க் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் 9% வட்டி விகித லாபம் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவே ரெகுலர் வாடிக்கையாளர் எனில் 8.50% வழங்கப்படும்.

இடையில் வெளியேறினால்

பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்துவிட்டு அது முதிர்ச்சி அடையும் முன்பு பணத்தை வெளியில் எடுத்தால், அந்த திட்டத்தின் 1 சதவிகித வட்டி விகிதம் குறைக்கப்படும்.

சேமிப்பு கணக்குகளுக்கு 7% வட்டி விகிதம்

யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் பாங்க் வங்கி கணக்கில் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருப்பு வைக்கும் போது 7% வட்டி விகிதம் லாபம் கிடைக்கும். 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருப்பு இருந்தால் 6% ஆண்டுக்கு 7% வட்டி விகித லாபம் கிடைக்கும்.

பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு அதிக வட்டி விகித லாபம் வழங்கும் பிற ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள்

சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் பாங்க்

சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் 999 நாட்கள் முதலீடு செய்தால் 8.01% வட்டி விகித லாபம் கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கு 8.26% வட்டி விகித லாபம் வழங்கப்படுகிறது.

ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் 1 முதல் 2 ஆண்டுகள் வரையில் 15 லட்சம் முதல் 2 கோடி ரூபாய் வரை பிக்சட் டெபாசிட் முதலீடு செய்தால் 8.35% வட்டி விகித லாபம் வழங்கப்படுகிறது. அதுவே மூத்த குடிமக்கள் எனில் 8.50% வட்டி விகிதம் லாபம் கிடைக்கும்.

seithichurul

Trending

Exit mobile version