சினிமா செய்திகள்

மீண்டும் சேனாபதியின் வேட்டை.. இன்றுமுதல் இந்தியன் 2 படப்பிடிப்பு துவக்கம்!

Published

on

ஷங்கர் இயக்கத்தில் கமல் இரட்டை வேடங்களில் நடித்த இந்தியன் திரைப்படம் கடந்த 1996ம் ஆண்டு வெளியானது. இந்தியன் படம் இந்திய அளவில் ஷங்கருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது.

23 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்கர் மற்றும் கமல் முன்வந்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்படத்திற்கான முதல் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், இன்று முதல் இந்தியன் 2 படப்பிடிப்பு பிரம்மாண்டாமாக துவங்குகிறது. இந்த படத்தில் சேனாபதி முதல் பாகத்தை விட இன்னமும் வயதானவராகவும், அறிவுக்கூர்மையானவராகவும், வெறித்தனம் மிக்க வேட்டைக்காரராகவும் ஊழலை களையெடுக்க களமிறங்கவுள்ளார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாகவும், பேரனாக சித்தார்த் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

author avatar
seithichurul

Trending

Exit mobile version