இந்தியா

சிவசேனா-பாஜக உறவு அமீர்கான் – கிரண்ராவ் உறவு போன்றது: சஞ்சய் ராவத்

Published

on

சிவசேனா மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகள் இடையே உள்ள உறவு அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ் இடையே இருக்கும் உறவு போன்றது என சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா இணைந்து கூட்டணியாக போட்டியிட்டது. ஆனால் தேர்தலுக்கு பின் இரு கட்சிகளும் இருவேறு துருவங்களாக பிரிந்தது என்பதும், சிவசேனா கட்சி பாஜகவை கழட்டி விட்டுவிட்டு மற்ற கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

அது முதலே பாஜக மற்றும் சிவசேனா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் மத்திய அரசை சிவசேனா கட்சி மத்திய அரசையும் பாஜகவையும் பெரிதாக விமர்சனம் செய்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பாஜக உடனான உறவு குறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சிவசேனா கட்சி மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறும்போது ’எங்கள் கட்சியான சிவசேனா கட்சியும் பாஜகவும் நண்பர்களாகவும் இல்லை, எதிரிகளாகவும் இல்லை என்றும், சிவசேனா – பாஜக இடையிலான உறவு அமீர்கான் மற்றும் அவருடைய மனைவி கிரண்ராவ் இடையே உள்ள உறவு போன்றது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சிவசேனா மற்றும் பாஜக கட்சிகள் இந்தியா-பாகிஸ்தான் போன்றவை அல்ல என்றும் அதேநேரத்தில் நெருங்கிய நண்பர்களும் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்

சமீபத்தில் அமீர் கான் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக கூறினார் என்பதும், ஆனால் அதே நேரத்தில் நாங்கள் கணவன்-மனைவியாக மட்டும் தான் இல்லையே தவிர நண்பர்களாகவும் குழந்தைகளுக்காக ஒன்றாகவும் இருப்போம் என்று கூறி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

seithichurul

Trending

Exit mobile version