தமிழ்நாடு

பிப்ரவரி 1 முதல் கல்லூரிகள் திறப்பு: செமஸ்டர் தேர்வு ஆன்லைனா? நேரடியாகவா?

Published

on

பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறுமா? அல்லது நேரடியாக நடைபெறுமா? என்பது குறித்த தகவலை உயர்கல்வி துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து உள்ளதை அடுத்து பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 1ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்தது. அதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தொடங்கும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என ஏற்கனவே உயர்கல்வித்துறை தெரிவித்திருந்த நிலையில் தற்போது கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறுமா? அல்லது நேரடியாக நடைபெறுமா? என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.

இதனை அடுத்து இது குறித்து விளக்கம் அளித்துள்ள உயர்கல்வித்துறை கல்லூரிகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைனில் தான் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி வகுப்புகளுக்கு நேரடியாக வரும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வு நாளன்று மட்டும் வீட்டிலிருந்தே ஆன்லைன் தேர்வு எழுதுவதா? அல்லது கல்லூரிகளுக்கு வந்து ஆன்லைனில் எழுதுவதா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து உயர்கல்வித்துறை விரிவான விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version