ஆரோக்கியம்

செம்பருத்திப்பூவில் இத்தனை மருத்துவ குணங்களா? இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே!

Published

on

செம்பருத்தி இலைகளைப் பொடியாக்கி தினமும் இருவேளைச் சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

செம்பருத்திப் பூவில் தங்கச்சத்து இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 6.5 கிராம் செம்பருத்திப்பூ சாப்பிட்டால், ஒரு குண்டுமணி அளவு தங்கம் சாப்பிட்ட பலன் கிடைக்கும். செம்பருத்திப்பூவின் மிக முக்கிய மற்றும் சிறப்பான அம்சம், இருதய நோய்க்கு இது அருமையான மருந்து.

இருதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் செம்பருத்திப்பூவை மருந்தாக உட்கொள்ளும்போது, ஆறு பூக்களின் இதழ்களை ஒரு சட்டியில் போட்டு, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றிச் சுண்டக் காய்ச்சவும். அந்தச் சாறில் 6 டீஸ்பூன் அளவு தினமும் காலை, மாலை என தொடர்ந்து 24 நாட்கள் சாப்பிட்டு வந்தால், கை மேல் பலன் கிடைக்கும்.

குழந்தைகளுக்கு வரக்கூடிய வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வயிற்று உப்புசம் பிரச்சினைகளுக்கு, செம்பருத்தித்திப்பூ கஷாயம் நல்ல மருந்து. சில குழந்தைகளுக்குக் கல்லீரலில் வீக்கம் வந்து அது காய்ச்சலாக வெளிப்படும்.

செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைப்பொடி கலந்து எண்ணெய்யில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

செம்பருத்திப்பூ ஜுஸ்:

ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்த 10 செம்பருத்திப் பூக்களை போட்டு மூடி, அடுப்பை அணைத்து விடவும். நீர் ஆறிய நிலைக்கு வரும்போது செம்பருத்தியின் சாறு தண்ணீரில் இறங்கியிருக்கும். பின், நீரை வடிகட்டி, எலுமிச்சம் பழ சாறு கலக்கவும் (அல்லது சர்க்கரை). இது உடல் சூட்டை குறைந்து ஆரோக்கியத்தை அதிகரிக்கும். மேலும், இதற்கு கடையில் வாங்கு பூவை பயன்படுத்த வேண்டாம்.

செம்பருத்தி டீ

செம்பருத்திப் பூவினால் தயாரிக்கப்படும் இந்த டீ உடலுக்கு நல்ல இரத்த ஓட்டத்தை அளிக்கக்கூடியது-

Trending

Exit mobile version