தமிழ்நாடு

சென்னையில் கொட்டித்தீர்க்கும் மழை… செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் திறப்பு!

Published

on

சென்னையில் நேற்று மாலை முதல் விடாமல் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. அடுத்த 6 மணி நேரத்துக்கு சென்னையில் மழை விடாது பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இத்தகைய சூழலில் விடாது மழையால் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஆகிய இரண்டு ஏரிகளில் இருந்தும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அந்த ஏரி பாயும் பகுதிகளை ஒட்டி வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் அளவை 22 அடிக்கும் குறைவாகவே வைத்துக் கண்காணிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவால் ஐந்து மதகுகளில் வழியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால், குன்றத்தூர்- திருபெரும்பத்தூர் இடையேயான தரைப்பாலம் மூழ்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நாரவாரிகுப்பம், வடகரை, புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி சென்னை மாநகரக் காவல் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Trending

Exit mobile version