சினிமா

ஓடிடியில் வெளியாகும் செல்வராகவன் படம்.. இப்படி ஆகிப்போச்சே!….

Published

on

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், என்.ஜி.கே உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் செல்வராகவன். தனது சகோதரர் தனுஷை வைத்து ‘என்ன சொல்லப்போகிறாய்’ என்கிற படத்தை துவங்கினார். ஆனால், அப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை.

ஒருபக்கம் சினிமாவில் நடிப்பதில் அவர் பிஸியாகிவிட்டார். ஏற்கனவே, சாணி காயிதம் என்கிற படத்தில் கீர்த்தி சுரேஷுடன் நடித்தார். பின், விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில் அசத்தலான வேடத்தில் நடித்துள்ளார். மேலும், மோகன் ஜி இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்திலும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், சாணி காயிதம் நேரிடையாக பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் பிரைமில் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் செல்வராகவனின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

 

 

க்ரைம் த்ரில்லர் உருவாகியுள்ள இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

தான் நடித்த முதல் திரைப்படம் தியேட்டரில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியாவது செல்வராகவனை அப்செட் ஆக்கியுள்ளதாம்.

seithichurul

Trending

Exit mobile version