சினிமா

முழுநேர நடிகராக மாறிய செல்வராகவன்… புதிய படத்தில் வில்லன் வேடம்…

Published

on

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், என்.ஜி.கே உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் செல்வராகவன். தனது சகோதரர் தனுஷை வைத்து ‘என்ன சொல்லப்போகிறாய்’ என்கிற படத்தை துவங்கினார். ஆனால், அப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை.

ஒருபக்கம் சினிமாவில் நடிப்பதில் அவர் பிஸியாகிவிட்டார். ஏற்கனவே, சாணி காயிதம் என்கிற படத்தில் கீர்த்தி சுரேஷுடன் நடித்தார். பின், விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில் அசத்தலான வேடத்தில் நடித்துள்ளார். மேலும், மோகன் ஜி இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்திலும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், அடுத்து ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ஜித்தன் ரமேஷ் ஹீரோவாகௌம், ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாகவும் நடிக்கவுள்ளனர்.

இப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version