சினிமா செய்திகள்

தளபதி விஜய்யின் அடுத்த படத்தில் செல்வராகவன்: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

Published

on

தளபதி விஜய் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் இணைந்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘பீஸ்ட்’ என்பதும் இந்தப் படத்தை நெல்சன் இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் தற்போது இயக்குனர் செல்வராகவன் இணைந்து இருக்கிறார் என சன்பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் செல்வராகவன் இந்த படத்தில் இணைந்து இருப்பதை உறுதி செய்துள்ளது. இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.

தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் செல்வராகவன் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிரபல மலையாள நடிகர் சாக்கோ என்பவர் இந்த படத்தில் வில்லனாக நடித்து வருவதை அடுத்து செல்வராகவன் மெயின் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பை அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை வரும் 2022ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version