தமிழ்நாடு

‘தெர்மாகோலை நானா கண்டுபிடிச்சேன்..?’- கேலி, கிண்டலுக்கு செல்லூர் ராஜூவின் ஃபீலிங்

Published

on

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் மதுரை மேற்குத் தொகுதியில் களம் காண்கிறார். இதையொட்டி, தன் சொந்த தொகுதியில் அவர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தன் மீது தொடர்ந்து வைக்கப்பட்டு வரும் ‘தெர்மாகோல் விமர்சனம்’ பற்றி கலகலப்பாக பேசியுள்ளார் செல்லூர் ராஜூ.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வைகை நதியிலிருந்து தண்ணீர், வெப்பம் காரணமாக ஆவியாவதைத் தடுக்க தெர்மாகோல் போட்டு மூடும் திட்டத்தைத் தொடங்க முற்பட்டார் செல்லூர் ராஜூ. இந்தத் திட்டம் நினைத்தது போல எடுபடவில்லை. அதே நேரத்தில் நதியை தெர்மாகோல் போட்டு மூட முற்பட்ட ‘விஞ்ஞானப்பூர்வ’ யோசனைக்காக அது கேலி செய்யப்பட்டது.

இதைச் சுட்டிக்காட்டிப் பிரச்சாரத்தின் போது பேசிய ராஜூ, ‘நான் தெர்மாகோலை கண்டுபிடிக்கவில்லை. அதிகாரிகள் சொன்னார்கள். அதன்படி திட்டத்தை செயல்படுத்த முற்பட்டோம்.

திமுககாரர்கள் என்னை கேலியும் கிண்டலும் செய்யலாம். ஆனால், என் மீது அவர்களால் எந்தக் குறையையும் சொல்ல முடியாது. அந்தளவுக்கு என் பணியில் நான் சிறப்பாக செயல்பட்டிருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version