தமிழ்நாடு

தெர்மாகோல் ஆராய்ச்சியில் இருந்த செல்லூர் ராஜூ: பாஜக கிண்டல்!

Published

on

அதிமுக-பாஜக இடையே நிலவிவரும் கருத்து மோதலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை, மத்தியில் ஆளுகிறோம் என்னும் திமிரில் பேசக்கூடாது என கூறியிருந்தார். இதற்கு பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் செல்லூர் ராஜூவின் தெர்மாகோல் புகைப்படத்தை பகிர்ந்து கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

#image_title

நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, எங்கள் கட்சியிலிருந்து பாஜகவில் சேரும்போது இனித்தது. இப்பொழுது அங்கிருந்து இங்கு வரும் பொழுது கசக்கிறதா. பாஜகவிற்கு சகிப்புத்தன்மை வேண்டும். வாயடக்கம் தேவை. வாய்க்கொழுப்புடன் பேசக்கூடாது. மத்தியில் ஆளுகிறோம் என்னும் திமிருடன் பேசக்கூடாது. கூட்டணிக் கட்சிகளின் தோளில் உட்கார்ந்து கொண்டு காதைக் கடிப்பதை அதிமுக பொறுத்துக்கொண்டு இருக்காது. எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரிக்கும் அளவிற்கு பாஜக தரம் தாழ்ந்துவிட்டது என விமர்சித்தார்.

செல்லூர் ராஜூவின் இந்த பேச்சுக்கு பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார். அதில், செல்லூர் ராஜூவின் தெர்மாகோல் புகைப்படத்தை பகிர்ந்து, இத்தனை நாட்கள் தெர்மகோல் ஆராய்ச்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமிரில் பேசக் கூடாது என பாஜகவுக்கு ஆலோசனை சொல்லுகிறார். அவர் தன்னை வளர்த்துக் கொண்ட பின் கருத்துச் சொன்னால் நல்லது. வாய்க்கொழுப்பின்றி பேசுவது; திமிரின்றி நடந்து கொள்வது என்பது குறித்தெல்லாம் வகுப்பெடுக்க மதுரையில் விரைவில் கல்லூரி துவங்கப் போறாராம் செல்லூர் ராஜு. நெருங்கிய நட்பில் இருக்கும் யாராவது அங்க ஒரு ‘சீட்’ வாங்கிக் கொடுங்கப்பா! என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version