தமிழ்நாடு

சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து கீழே விழுந்து விடிய விடிய கத்திய இளைஞர்!

Published

on

சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து தவறி விழுந்து விடியவிடிய தன்னை காப்பாற்றுமாறு கத்திய இளைஞர் ஒருவர் இன்று காலை மீட்கப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செல்பி மோகத்தால் பலர் ரிஸ்க் எடுத்து ஆபத்தில் மாட்டிக் கொண்டு வரும் சம்பவங்கள் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் சென்னை நேப்பியர் பாலத்தில் இளைஞரொருவர் பாலத்தில் நின்று கொண்டு செல்ஃபி எடுத்துள்ளார். அப்போது அவர் திடீரென பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் விழுந்து விட்டார். கூவம் ஆற்றில் இருந்து அவர் தத்தளித்துக் கொண்டு தன்னை காப்பாற்றுமாறு கத்தி உள்ளார்.

ஆனால் இரவு நேரத்தில் அந்த பக்கம் சென்ற யாரும் அவரை கவனிக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு அவர் கூவம் ஆற்றில் இருந்து கத்தியதை பார்த்த ஒரு சிலர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவலர்கள் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று தன்னை காப்பாற்றுமாறு கத்திய இளைஞரை மீட்டனர்.

இரவு பத்து மணியிலிருந்து காலை 6 மணி வரை விடிய விடிய அவர் தன்னை காப்பாற்றுமாறு கத்திய நிலையில் இன்று காலை தான் அவர் மீட்கப்பட்டு உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பதும் அவருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்க கூடாது என்று பலர் அறிவுறுத்தினாலும் செல்பி மோகத்தால் பலர் இது போன்ற ஆபத்துகளில் சிக்கி தவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version