சினிமா செய்திகள்

செலினா கோம்ஸின் இந்த முடிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்!

Published

on

பாப் பாடகி செலினா கோம்ஸ், 64வயது முதிய ஹாலிவுட் நடிகர் பில் பெர்ரியை திருமணம் செய்யப்போவதாக தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.

ஜஸ்டின் பீபருடன் டேட்டிங்கில் இருந்த செரினா வில்லியம்ஸை ஜஸ்டின் பீபர் கழட்டி விட்ட நிலையில், தற்போது செலினா கோம்ஸ் தனது திருமணம் தொடர்பாக அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

64வயது முதிய ஹாலிவுட் நடிகரான பில் பெர்ரியை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செலினா கோம்ஸ் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவை கண்ட ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், தங்களது அதிருப்தியையும் கமெண்டுகளின் வழியாக தெரிவித்து வருகின்றனர்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் பில் பெர்ரியுடன் ஜோடி போட்டு ரெட் கார்ப்பெட்டை அலங்கரித்த பின்னர் செலினா கோம்ஸ் தனது இன்ஸ்டாகிராமில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

24வயதாகும் செலினா கோம்ஸ்க்க்கும் 64 வயதாகும் பில் பெர்ரிக்கும் எப்படி செட் ஆகும் என மீம்ஸ்கள் மற்றும் ட்ரோல்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

ஆனால், இது சும்மா ஒரு ஜோக் என்றும் சிலர் கூறிவருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version