விமர்சனம்

நகுலின் ’செய்’ விமர்சனம்!

Published

on

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகுல் நடித்திருக்கும் செய் படம் அவருக்கு வெற்றியை தந்ததா இல்லையா என்பதை பார்ப்போம்.

இயக்குநர் ராஜ்பாபு இயக்கியுள்ள இந்த படம் பல படங்களில் இருந்து காட்சிகளை அப்பட்டமாக உருவி எடுக்கப்பட்ட ஒரு படமாகவே அமைந்துள்ளது. அஜித்தின் என்னை அறிந்தால் மற்றும் சிவகார்த்திகேயனின் காக்கிச் சட்டை ஆகிய இரு படங்களும் ஒரு ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்டவை.

அதே ஹாலிவுட் படத்தை மையமாக வைத்தே இந்த படமும் உருவாகியுள்ளது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹிட் கொடுக்க வேண்டும் என்று நினைத்த நகுலுக்கு இந்த படமும் பலத்த ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.

ராஜ்பாபு இயக்கியுள்ள இந்த படத்தில் நகுலுக்கு ஜோடியாக ஆஞ்சல் முஞ்சால் என்ற புதுமுக நாயகி நடித்துள்ளார். ஆனால், படத்தில் இருவரும் இறுதி வரை பார்க்காமலே காதல் கோட்டை காதலை செய்கின்றனர். ஆனால், கிளைமேக்ஸிலும் பார்க்கவில்லை என்பது தான் இப்படத்தில் மாற்றம் செய்யப்பட்ட திரைக் கதை.

‘செய்’ படத்தின் கதை தான் என்ன?

பெரிய ஹீரோவாக ஆசைப்படும் நகுல் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். அவரது அப்பா ஆம்புலன்ஸ் டிரைவர். ஒரு நாள் ஆம்புலன்ஸ் ஓட்டும் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாததால், அவருக்கு பதிலாக நகுல் ஆம்புலன்ஸ் ஓட்ட முற்பட உடல் உறுப்புகளை கடத்தி விற்கும் சதிகார கும்பலின் சூழ்ச்சி வலைக்குள் நகுல் சிக்குகிறார். பின்னர் அதிலிருந்து எப்படி தப்பித்தாரா இல்லையா என்பதே படத்தின் கதை.

நட்புக்காக பிரகாஷ் ராஜ் மற்றும் நாசர் நடித்துள்ளது போல தெரிகிறது. இருவரும் வழக்கம் போல தங்களது வேலையை கச்சிதமாக செய்கின்றனர்.

அறிமுக நாயகி ஆஞ்சல் மூஞ்சல் பாடல்களுக்கு மட்டும் தேவை படுகிறார். ஆனால், பாடல்கள் தான் படத்திற்கு பலத்தை கூட்டாமல் தேவையற்ற ஒன்றாக தனித்து நிற்கிறது.

நிக்ஸ் லோபஸ் இசையில் ஒரு பாடலும் ரசிக்கும் படியாக இல்லை. விஜய் உலகநாத்தின் கேமரா படத்திற்கு ஓகே ரகம் தான். நகுலின் நடிப்பு பல இடங்களை ரசிகர்களுக்கு சளிப்பை கொடுக்கிறது.

மொத்தத்தில் செய் படம் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என்றே தோன்றுகிறது.

மார்க்: 25/100.

seithichurul

Trending

Exit mobile version