சினிமா

சிவகார்த்திகேயன் நடித்துவரும் சீமராஜா படம் 13ம் தேதி ரிலீஸ்!

Published

on

சீமராஜா படம் வரும் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. சீமராஜா படத்தை வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்கிறார்கள்.

பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள சீமராஜா படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதுவரை சூரி – சிவகார்த்திகேயன் கூட்டணியில் வந்த 5 படங்கள் அனைத்துமே குடும்பக் கதைகளை மையப்படுத்தியே வந்து சூப்பர் ஹிட் கொடுத்த நிலையில் உள்ளது. சீமராஜா படமும் சூப்பர் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் செல்போனும் கையுமாக வாட்ஸ்ஆப், டிவிட்டர், ஃபேஸ்புக் என்று ஆன்லைனில் இருக்கும் காலம் இது. அப்படிப்பட்ட காலத்தில் பயாஸ்கோப் காட்டிப் படத்தை விளம்பரம் செய்ய நினைத்தது ஒரு வித்தியாசமான முயற்சி. பழைய முறைகளை நாம் மெல்ல மெல்ல மறந்து வரும் நிலையில் இப்படிப் பயாஸ்கோப் வண்டியை அனுப்புவது பாராட்டுக்குரியது.

சிவகார்த்திகேயன் ரசிகர்கள், குழந்தைகள், பெரியவர்கள் சீமராஜா படத்தைப் பார்க்க ஆர்வம் காட்டி வருவதைச் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வெளியிட்டு வருகின்றனர்.

Trending

Exit mobile version