தமிழ்நாடு

“ஸ்டாலின்… ப்ளீஸ் இத ஒரு முறை சொல்லுங்களேன் பாப்போம்!”- சீமான் விடுத்த நேரடி சவால்

Published

on

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேரடி சவால் விட்டுள்ளார்.

சென்னை, மண்ணடியில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஆவேச உரையாற்றிய சீமான்,

‘தமிழகத்தில் பாஜகவின் நிலைமை என்ன. ஒன்றுமே இல்லாத பாஜகவே, எடுத்துப் போய் நம்பர் 1 இடத்தில் வைத்தது யார்..? திமுக தான்.

திமுக தலைவராக இருந்த கருணாநிதி, ‘ஆர்.எஸ்.எஸ் ஒரு சமூக இயக்கம். அதை மக்கள் இடத்தில் கொண்டு போய் சேர்ப்பது திமுக தொண்டனின் கடமை’ என்றார். தமிழகத்தில் முதன் முதலில் பாஜகவையும் ஆர்.எஸ்.எஸ்-ஸையும் வளர்த்து விட்ட கட்சி திமுக. இன்று அதற்கு எதிராக இருப்பது போல ஒரு நாடகம் போடுகிறது.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால், ஒரே ஒரு முறை, ஒரே ஒரு முறை, காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளோடு கூட்டணி இல்லை என்று சொல்லட்டும்.

ஆனால், நான் சொல்கிறேன்… எப்போதும் பாஜக, காங்கிரஸ், திமுகவோடு கூட்டணி இல்லை. எந்த நேரத்திலும் தனித்து தான் போட்டியிடுவோம் என்று உறுதியளிக்கிறேன்’ என கரகோஷங்களுக்கு மத்தியில் பேசினார்.

Trending

Exit mobile version