தமிழ்நாடு

சீமான் ஏன் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை? காங்கிரஸ் கேள்வி!

Published

on

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ராகுல் காந்தி. இதனையடுத்து ராகுல் காந்தி பலமுறை வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் இதுவரை தேர்ந்தெடுக்கப்படவில்லை.

ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாலும், புதிய தலைவர் இன்னமும் தேர்ந்தெடுக்கப்படாமலும் இருப்பதால் காங்கிரஸ் கட்சி தற்போது தலைமை இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இதனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கணைப்பாளர் சீமான் தலையில்லா முண்டம் என விமர்சித்துள்ளார்.

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது. இதில் காட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தீப லஷ்மிக்கு வாக்கு சேகரித்து பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சியை தலையில்லா முண்டமாக ஒரு தலைவனை தேர்ந்தெடுக்கக் கூடிய தகுதி இல்லாத கட்சியாக இருக்கின்றது என காட்டமாக விமர்சித்தார். இது தமிழக காங்கிரஸ் கட்சியினரை கோபப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை மாநில தலைவர் அஸ்லம் பாஷா கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், காங்கிரஸ் கட்சியை தலையில்லா முண்டமாக ஒரு தலைவனை தேர்ந்தெடுக்கக் கூடிய தகுதி இல்லாத கட்சியாக இருக்கின்றது என்று சீமான் கூறியது கண்டிக்கத்தக்கது. காங்கிரஸ் கட்சியில் தோல்வியை ஏற்று காந்திய வழியில் இளம் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் அவரது ராஜினாமாவை ஏற்காத அனைத்து தலைவர்களும் அவர் தான் தலைவராக வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதுவரையில் தலைவரை தேர்ந்தெடுக்க முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு கட்சி ஆரம்பித்தீர்கள். கட்சி ஆரம்பித்த பிறகு எத்தனை முறை சீமான் ஆகிய நீங்கள் பொது தேர்தலில் போட்டி இட்டுள்ளீர்கள். போட்டியிட்ட நீங்கள் ஜெயித்தது உண்டா, இதுவரையில் ஜெயிக்காத சீமான் அவர்களே! நீங்கள் ஏன் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version