செய்திகள்

கே.டி.ராகவன் அப்படி என்ன தவறு செய்துவிட்டார்? – முட்டுக்கொடுக்கும் சீமான்…

Published

on

தமிழக பாஜக பொதுச் செயலாளராக இருந்த கேடி ராகவன் என்பவரது சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செல்போன் வீடியோ காலில் அதுவும் பூஜையறையில் அவர் செய்த லீலையை கண்டு பலரும் கொதிப்படைந்தனர். எனவே, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த கேடி ராகவன் இதுகுறித்து தான் நீதிமன்றத்தில் சட்டப்படி சந்திப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

ஒருபக்கம், கேடி ராகவன் வீடியோவை வெளியிட்ட மதன் என்ற யூடியூபர் பாஜக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த விவகாரம் தமிழக பாஜகவை கடுமையான நெருக்கடிக்கு தள்ளியிருக்கிறது. எனவே, கே.டி ராகவன் வீடியோ விவகாரம் குறித்து மத்திய இணை அமைச்சர் முருகனுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென ஆலோசனை செய்து வருகிறார்.

இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி சீமான் ‘யாரும் செய்யாத தவறையா கே.டி.ராகவன் செய்து விட்டார். ஒருவரின் அந்தரங்கத்தி வீடியோ எடுத்தது தவறு. வீடியோ எடுத்த நபரைத்தான் கைது செய்ய வேண்டும்’ என முட்டு கொடுத்துள்ளார்.

இதையடுத்து, நெட்டிசன்கள் பலரும் சீமானை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version