தமிழ்நாடு

பேனா நினைவு சின்னத்தை நிச்சயம் உடைப்பேன்: மீண்டும் சீரும் சீமான்!

Published

on

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்கும் விவகாரத்தில் ஆரம்பம் முதலே திமுகவினரை சீண்டி வரும் நாம் தமிழர் கட்சி சீமான் தற்போது மீண்டும் தனது நிலைப்பாடை உறுதி செய்து சீண்டியுள்ளார்.

#image_title

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில் சென்னையில் கடலின் நடுவே பிரம்மாண்ட பேனா சிலையை அமைக்க உள்ளதாக கூறப்பட்டதில் இருந்து அதற்கு பல தரப்பில் இருந்து ஆதரவும், எதிர்ப்புமாக கலந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பொதுமக்கள் கருத்து கேட்பு நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட சீமான் பேனா சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அவ்வாறு பேனா சிலை அமைத்தால் அதனை தான் வந்து உடைப்பேன் எனவும் ஆக்ரோஷமாக கூறினார். இதனால் திமுகவுக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே சமூக வலைதளங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டன.

இந்நிலையில் நாகர்கோவிலில் நடைபெற்ற தனது சகோதரி மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் பேனா நினைவு சின்னம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ஏற்கனவே சிலை வைக்கப்பட்டுள்ளது. மதுரையில் அவரது பெயரில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது.

தற்போது கடலுக்குள் பேனா வைப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. கடலின் நிலப்பரப்பை நிரப்பி பேனா வைப்பதாக கூறுவது கண்டிக்கத்தக்கது. சிலையை வைப்பது தொடர்பாக பணி தொடங்கப்பட்டால் போராட்டம் நடத்தப்படும். அதிகாரம் எங்கள் கைக்கு வரும்போது அதை உடைப்போம் என்றேன். அதிகாரம் ஒரே ஒருத்தருக்குப் பட்டயம் போட்டு வைக்கவில்லை. அந்த அதிகாரம் என் கைக்கு வரும்போது நான் உடைப்பேன் என்றார் மீண்டும்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version