Connect with us

தமிழ்நாடு

பேனா நினைவு சின்னத்தை நிச்சயம் உடைப்பேன்: மீண்டும் சீரும் சீமான்!

Published

on

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்கும் விவகாரத்தில் ஆரம்பம் முதலே திமுகவினரை சீண்டி வரும் நாம் தமிழர் கட்சி சீமான் தற்போது மீண்டும் தனது நிலைப்பாடை உறுதி செய்து சீண்டியுள்ளார்.

#image_title

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில் சென்னையில் கடலின் நடுவே பிரம்மாண்ட பேனா சிலையை அமைக்க உள்ளதாக கூறப்பட்டதில் இருந்து அதற்கு பல தரப்பில் இருந்து ஆதரவும், எதிர்ப்புமாக கலந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பொதுமக்கள் கருத்து கேட்பு நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட சீமான் பேனா சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அவ்வாறு பேனா சிலை அமைத்தால் அதனை தான் வந்து உடைப்பேன் எனவும் ஆக்ரோஷமாக கூறினார். இதனால் திமுகவுக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே சமூக வலைதளங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டன.

இந்நிலையில் நாகர்கோவிலில் நடைபெற்ற தனது சகோதரி மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் பேனா நினைவு சின்னம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ஏற்கனவே சிலை வைக்கப்பட்டுள்ளது. மதுரையில் அவரது பெயரில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது.

தற்போது கடலுக்குள் பேனா வைப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. கடலின் நிலப்பரப்பை நிரப்பி பேனா வைப்பதாக கூறுவது கண்டிக்கத்தக்கது. சிலையை வைப்பது தொடர்பாக பணி தொடங்கப்பட்டால் போராட்டம் நடத்தப்படும். அதிகாரம் எங்கள் கைக்கு வரும்போது அதை உடைப்போம் என்றேன். அதிகாரம் ஒரே ஒருத்தருக்குப் பட்டயம் போட்டு வைக்கவில்லை. அந்த அதிகாரம் என் கைக்கு வரும்போது நான் உடைப்பேன் என்றார் மீண்டும்.

author avatar
seithichurul
செய்திகள்34 நிமிடங்கள் ago

ராக்ஷாபந்தன் எதிரொலி விமான டிக்கெட் கட்டணங்கள் 46% வரை உயர்வு!

பிற விளையாட்டுகள்1 மணி நேரம் ago

பாரிஸ் ஒலிம்பிக் 2024: ஜூலை 28, 2024 – இந்தியாவின் முழு அட்டவணை

பர்சனல் ஃபினான்ஸ்2 மணி நேரங்கள் ago

இந்தியாவில் உள்ள மூத்த குடிம்மக்களுக்கான இந்த 8 நிதி நலன்கள் பற்றி எல்லாம் தெரியுமா?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேரளா சிப்ஸ்: இனி வீட்டிலேயே சுவையாக செய்து சாப்பிடலாம்!

சிறு தொழில்2 மணி நேரங்கள் ago

இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிப்பது எப்படி? 5 எளிய வழிகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

கடன் தொல்லையா? இன்று ஆடி அஷ்டமி! பைரவருக்கு இந்த விளக்கேற்றி வழிபடுங்கள்!

சினிமா2 மணி நேரங்கள் ago

தனுஷின் ‘ராயன்’, இரண்டு நாளில் ரஜினியின் ‘லால் சலாம்’ வசூலை முறியடித்தது!

heart attack
ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

மாரடைப்பு ஏற்படும் முன் தெரியும் அறிகுறிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ரூ.1,00,000/- ஊதியத்தில் TIDCO -ல் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

வாழைத்தண்டு வித்தியாசமான சுவை! ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி!

பல்சுவை6 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

ஆனந்த் அம்பானி திருமண பரிசுகள்: பிரைவேட் ஜெட் முதல் ஃபாரின் பங்களா வரை!