தமிழ்நாடு

காக்கா கதை சொல்லி பிரச்சாரம்… சீமானின் புதிய யுக்தி!

Published

on

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கரூர் மாவட்டத்தில் நேற்றுத் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது வித்தியாசமான முறையில் காக்கா கதை சொல்லிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இது மக்களை வெகுவாக கவர்ந்தது.

நாம் தமிழர் கட்சி, இதுவரை சந்தித்த அனைத்துத் தேர்தல்களைப் போலவே 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலையும் தனித்தே சந்திக்கிறது. முன்னர் நடந்த தேர்தலில் ஆணுக்கும் பெண்ணுக்கு சரிபாதி தொகுதிகள் ஒதுக்கியது போலவே, இந்த தேர்தலிலும் சமமாக இடங்களை ஒதுக்கி களத்தில் நிற்கிறது நாம் தமிழர். அந்தக் கட்சியின் தலைமைப் பேச்சாளரான சீமான், கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்துத் தொடர்ந்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் நேற்று கரூரில் நாம் தமிழர் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த சீமான், ‘சென்னையில் ஒரு நிகழ்வு நடந்தது. அதை சொல்கிறேன். அமாவாசை வந்தவுடன் ஒரு வீட்டில் இருந்த அம்மா, காக்காவுக்கு சோறு வைத்தது. அந்த காக்கா வெறுமனே சுற்றித் திரியும் ஜீவன். ஒருவரால் வளர்க்கப்படுவது. அவர் தான் காக்காவை எடுத்து வந்த அந்த சோறை சாப்பிட வைத்தார். பின்னர் அந்த அம்மா, காகத்தை வளர்ப்பவருக்கு வாடகைப் பணம் கொடுத்தது. இது சென்னையில் உண்மையில் நடந்த சம்பவம்.

இதன் பின்னால் இருக்கிறது நமது முன்னோர்களின் மகத்தான அறிவியல். அந்தக் காலத்தில் நம் மூத்த குடிகள் கூடி வாழ்ந்த போது சமைத்த உணவில் நஞ்சு இருக்கிறதா என்று பார்க்க எப்போதும் சமைத்து முடித்தவுடன் காகத்துக்கு சற்று உணவு கொடுத்து விட்டுத்தான் சாப்பிடுவார்கள். அந்தப் பழக்கம் தான் தொன்று தொட்டுத் தொடர்கிறது. இதைப் பற்றியெல்லாம் சிந்திக்கும் திறனும், தமிழர்களின் பெருமைகளை மீட்கும் எண்ணமும் நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் தான் இருக்கும்’ என்று பரப்பரை மேற்கொண்டார்.

 

Trending

Exit mobile version