தமிழ்நாடு

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றுவோம்: சொன்னது யார் தெரியுமா?

Published

on

ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக ஆட்சி மாறி மாறி ஆட்சிக்கு வரும்போது தமிழ் புத்தாண்டும் மாறி மாறி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்தால் தை முதல் தேதிதான் தமிழ் புத்தாண்டு என்றும், அதிமுக ஆட்சிக்கு வந்தால் சித்திரை முதல் தேதி தான் தமிழ் புத்தாண்டு என்றும் கூறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த குழப்பங்களில் இருந்து பொதுமக்கள் இன்னும் விடுபடாத நிலையில் தற்போது தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றும் தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக அறிவிப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் முழு தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்து வருகிறது. தற்போதுள்ள தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் உண்மையான தமிழ்த்தாய் வாழ்த்தை தான் அனைவரும் பாட வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றி விடுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: நாங்கள் ஆட்சிக்கு வரும் போது தமிழ்த்தாய் வாழ்த்து இந்த பாடலாக இருக்காது என்றும், வேறொரு பாடல் இருக்கும் என்றும் கூறினார்.

மேலும் முழு தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாஜக கொண்டு வர சொன்னால் அதை பாராட்டத்தான் வேண்டும் என்றும் கூறியுள்ளார். தமிழ் புத்தாண்டு போலவே தமிழ்த்தாய் வாழ்த்தும் ஒவ்வொரு ஆட்சியின்போது மாறி மாறி வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version