தமிழ்நாடு

தாய்மதம் திரும்புங்கள் என்று நான் சொல்லவே இல்லை: சீமான் விளக்கம்!

Published

on

கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தங்கள் தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்ப வேண்டும் என சீமான் பேசியதாக கடந்த சில நாட்களாக செய்திகள் உலவி வருகிறது. இதனை அடுத்து சீமான், ஆர்.எஸ்.எஸ் கைக்கூலி என்றும் பாஜகவின் ‘பி’டீம் என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்து சீமான் நேற்று ஒரு கூட்டத்தில் விளக்கமளித்துள்ளார். கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தங்கள் தாய் மதமான இந்து மதத்துக்கு திரும்ப வேண்டும் என்று நான் சொல்லவே இல்லை. நான் மதம் பரப்ப வந்தவன் அல்ல. என்னுடைய மதம் சைவம், என்னுடைய மதம் வைணவம், நாங்கள் இந்துக்கள் அல்ல , சைவம் மற்றும் வைணவம் மதத்திற்கு திரும்புங்கள் என்று தான் கூறினேன்.

தமிழராகிய அனைவரும் இந்துக்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் சைவம் மற்றும் வைணவம் மதத்திற்கு திரும்ப வேண்டும் என்றுதான் நான் சொன்னேனே தவிர கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தாய் மதத்துக்கு திரும்ப வேண்டும் என்று நான் சொல்லவில்லை. நான் சொல்லாததை சொல்லியதாக ஊடகங்கள் தவறாக செய்திகள் வெளியிட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

மேலும் இந்துக்கள் எல்லோரும் தமிழர்கள், தமிழர்கள் எல்லோரும் இந்துக்கள் என்று எச் ராஜா சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. பீகாரில் இருக்கும் குஜராத்தில் இருக்கும் இந்துக்கள் அனைவரும் தமிழர் ஆகி விடுவார்களா? எனவே அவர் கூறுவதை யாரும் பொருட்படுத்த வேண்டாம்.

என்னுடைய சமயம் சிவசமயம், என்னுடைய சமயம் திருமாலை வழிபடுகிற வைணவ சமயம். அந்த சமயத்திற்கு எல்லோரும் திரும்புங்கள் என்று தான் நான் கூறி வருகிறேன். எனது பேச்சை ஒரு சிலர் திரித்து இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தாய்மதம் திரும்ப வேண்டும் என்று கூறியதாக செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். என்னை ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் என்றும் பாஜக ஆதரவாளர் என்றும் பேசுவது குறித்து நான் கண்டுகொள்வதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version