தமிழ்நாடு

விஜய்யுடன் கூட்டணியா? கொதித்து எழுந்த சீமான்!

Published

on

விஜய் உடன் கூட்டணி வைக்கும் அளவிற்கு எங்கள் கட்சி இன்னும் மோசமாகவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் கூறியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றனர் என்பதும் அதிமுக திமுகவுக்கு அடுத்து அதிக வெற்றியை விஜய் மக்கள் இயக்கத்தினர் தான் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி இந்த முறையும் தனித்து போட்டியிட வேட்பாளர்களை தேர்வு செய்து வரும் நிலையில் விஜய்க்கு நெருக்கமான பிஆர்ஓ ஒருவர் விஜய்யுடன் கூட்டணி வைத்து போட்டியிடலாமே என சீமானுக்கு ஆலோசனை கூறியதாக தெரிகிறது.

இதனை கேட்டு கொதித்தெழுந்த சீமான் விஜய் உடன் கூட்டணி வைக்கும் அளவுக்கு எங்கள் கட்சி இன்னும் மோசமாகவில்லை என்றும், வெற்றியோ தோல்வியோ தனித்துதான் போட்டி என்றும் சீமான் கூறியதாக தெரிகிறது.

இந்தநிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலை போலவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version