தமிழ்நாடு

‘கர்நாடகல மாநிலக் கட்சி; இங்க தேசியக் கட்சி’- பாஜகவின் டபுள் கேம் பற்றி சீமான்

Published

on

தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையில் நீண்ட காலமாக நீடித்து வரும் பிரச்சனை மேகதாது அணைக் கட்டும் விவகாரம்.

காவிரி ஆற்றின் குறுக்கே கேமதாது அணைக் கட்டுவதில் கர்நாடக பாஜக அரசு மிகத் தீவிரமாக இருக்கிறது. இது குறித்து அம்மாநில அரசு ஒன்றிய அரசின் முக்கியப் புள்ளிகளை சந்தித்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இப்படி அணைக் கட்டினால் தமிழ்நாட்டிற்குக் காவிரி நதி மீதுள்ள அதிகாரம் பறிபோகும் என்று தமிழக அரசு தெரிவித்து வருகிறது.

இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையில் அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது. நிலைமை இப்படியிருக்க, தமிழக பாஜக, கர்நாடக பாஜக அரசுக்கு எதிராக இந்த விவகாரத்தில் நிலைப்பாடு எடுத்துள்ளது. மேலும் கர்நாடக அரசுக்கு எதிராகப் போராட உள்ளதாகவும் அறிவித்து உள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘பாஜக கர்நாடகாவில் மேகதாது அணை கட்டவேண்டும் என்கிறார்கள். தமிழ்நாட்டிலோ அதை எதிர்த்துப் போராடுவோம் என்கிறார்கள். கர்நாடகாவில் அந்த மாநிலத்திற்கான கட்சியாகவும், இங்கே ஒரு நாடக அரசியலையும் செய்யும் இவர்கள், தேசிய இறையாண்மை, ஒற்றுமை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்’ என்று பாஜகவை விமர்சித்து உள்ளார்.

Trending

Exit mobile version