தமிழ்நாடு

அரும்பாக்கத்தில் கூவத்தை ஒட்டியிருந்த வீடுகள் அகற்றம்: களத்தில் சீமான்

Published

on

சென்னை, அரும்பாக்கத்தில் கூவம் நதிக் கரையோரம் அமைந்திருந்த வீடுகள், ஆக்கிரமிப்புகளாக இருக்கிறதென்று கூறி தமிழக அரசு சார்பில் அகற்றப்பட்டன. மேலும் அங்கிருந்தவர்களுக்கு சுமார் 9 கிலோ மீட்டர் தள்ளி மாற்று வீடுகளும் கொடுக்கப்பட்டு விட்டதாக அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆனால், வீடுகளை இழந்த அனைவருக்கும் புது வீடுகள் ஒதுக்கித் தரப்படவில்லை என்றும், திடீரென்று சொல்லாமல் வந்து வீடுகள் அகற்றப்பட்டுவிட்டுதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றன.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அரும்பாக்கம் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார்.

இதைத் தொடர்ந்து அவர், ‘ஆளும் திமுக அரசின் அதிகாரப்போக்கினால், ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் தொன்றுதொட்டு வாழ்ந்துவந்த வசிப்பிடத்திலிருந்து ஆதித்தமிழ்குடியினரை அப்புறப்படுத்துவதா? அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே இக்கொடுஞ்செயலில் ஈடுபடுவதா? மண்ணின் மைந்தர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்பதா?

அப்புறப்படுத்தப்பட்ட ஆதித்தமிழ்குடியினரை சந்தித்து, ஆறுதல் கூறினேன். அவர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட துணைநிற்பேன் என்ற உறுதியையும் அளித்தேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் வசிப்பிடங்களிலேயே நிரந்தர குடியிருப்புகளை ஏற்படுத்தி தருமாறு தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version