கிரிக்கெட்

IPL – முதன்முதலாக கேப்டனாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் செய்த காரியத்தைப் பாருங்க!

Published

on

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, கடந்த 9 ஆம் தேதி ஆரம்பித்து கோலகலமாக நடந்து வருகின்றது. நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் மோதின. இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன், முதல் முறையாக கேப்டனாக களமிறங்கினார். அப்போது அவர் செய்த ஒரு விஷயம் படு வைரலாக மாறியுள்ளது.

ஐபிஎல் 2021-ன், 4வது போட்டியில் பஞ்சாபும் ராஜஸ்தானும் மோதிக் கொண்டன. முதலில் பேட் செய்த பஞ்சாப், 20 ஓவர்களுக்கு 221 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கே.எல்.ராகுல், அதிகபட்சமாக 91 ரன்கள் குவித்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியும் ஆரம்பம் முதல் அதிரடி காண்பித்தது.

மற்ற வீரர்கள் அடுத்தடுத்துத் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுக்க, அணியின் கேப்டன் சாம்சன் மட்டும் கடைசி வரை களத்தில் இருந்தார். சதம் கடந்த அவர், கடைசி பந்தில் ஸ்டிரைக் எடுத்தார். அப்போது 5 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தது. பந்தைத் தூக்கி அடித்த சாம்சன், பவுண்டரியைத் தாண்டி அடிக்காமல் சொதப்பினார். இதனால் கேட்ச் எடுக்கப்பட்டது. ராஜஸ்தான் பரிதாபமாக தோற்றது. சாம்சன் சதமடித்தும் அது வீணாகவே போனது.

இந்நிலையில் அவர் போட்டிக்கான டாஸை வென்ற சாம்சன், அந்த நாணயத்தைத் தன் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டார். இதைப் பார்த்த ரெஃப்ரி ஒன்றும் புரியாமல் திகைத்துப் போனார். ஆனால் தன் முதல் போட்டி என்பதால் நாணயத்தை எடுத்துக் கொண்டதாக சாம்சன் சமிக்ஞை கொடுக்கவே ரெஃப்ரி எதுவும் சொல்லாமல் விலகிவிட்டார். இச்சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version