தொழில்நுட்பம்

ஆண்ட்ராய்ட் போன் பாதுகாப்பில் ஓட்டை… உங்களுக்கு தெரியாமல் போட்டோ, வீடியோ எடுக்க கூடிய அபாயம்!

Published

on

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களை மால்வேர் மூலம் தாக்கி, போனின் உரிமையாளர் அனுமதி இல்லாமல் போட்டோ, வீடியோ எடுக்க முடியும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்மார்ட்போன் பாதுகாப்பு குறித்து ஆராய்ச்சி செய்யும் செக்மார்க்ஸ் இதை கூகுள் நிறுவனத்திற்கு ஜூலை மாதமே தெரிவித்துள்ளார். அதுவும் இந்த பாதுகாப்பு பிழைகள் கூகுளின் பிக்சல் 2 எக்ஸ்எல், கூகுள் பிக்சல் 3 போன்களிலேயே உள்ளது.

கூகுளின் இந்த போன் மட்டுமல்லாமல் ஆண்ட்ராய்ட் மொபைல் விற்கும் சாம்சங், சியோமி மற்றும் பிற நிறுவனங்களின் தயாரிப்புகளிலும் இந்த குறைபாடு உள்ளதாக கூறப்படுகிறது.

முதலில் இந்த பாதுகாப்பு பிழையை கூகுள் முக்கியமாக கருதவில்லை. இது குறித்து கூகுள் வெளியிட்ட தகவலில் செக்மார்க்ஸ்க்கு நன்றியும், இந்த பாதுகாப்பை நிவர்த்தி செய்த மென்பொருள் பேச்-ஐயும் அனைத்து ஆண்டராய்ட் சாதன தயார்ப்பாளர்களுக்கும் வளங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version