சினிமா

சீக்ரெட் லைப் ஆப் பெட்ஸ் -2 விமர்சனம்… மூன்று கதைகள்… ஒரு முடிவு… எப்படி…

Published

on

2016ல் வெளியான சீக்ரெட் லைப் ஆஃப் பெட்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போதுதான் பார்க்க முடிந்தது. (எல்லா விமர்சனத்துக்குப் பின்னாடியும் ஒரு சீக்ரெட் உண்டு. என்பதால், இப்போதுதான் பார்க்கக் கிடைத்தது என்பதிலும் ஒரு சீக்ரெட் உண்டு. சீக்கிரம் அதை வெளியில் சொல்கிறேன்.) சீக்ரெட் லைப் ஆப் பெட்ஸ் வெளியான போது மேக்ஸ் என்ற நாய், ஸ்னோவ்பால் என்ற முயலின் அட்டகாசம், ட்யூக் என்ற மொரட்டு நாய் (பார்க்கத்தான். மற்றபடி அது ஒரு இன்னோசென்ட்) இவற்றின் சேட்டைகள் எல்லோராலும் ரசிக்கப்பட்டது. அதன் இரண்டாவது பாகம் மூன்று ஆண்டுகள் கழித்து தற்போது வெளிவந்துள்ளது அதன் இரண்டாவது பாகம்.

வீட்டில் வளர்க்கும் எல்லா விலங்குகளுக்கும் அவர்கள் முதலாளிகள் வெளியில் போனதும் என்ன செய்வார்கள், அவர்களது நாள் எப்படி இருக்கும் என்ற கற்பனையின் வடிவமே சீக்ரெட் லைப் ஆப் பெட்ஸ் படத்தின் கற்பனை கதை.

இரண்டாவது பாகத்தில் மூன்று கதைகள் இருக்கின்றன. முதல் கதை மேக்ஸ் தன்னுடைய முதலாளிகளுடன் விடுமுறை நாளில் பண்ணை வீட்டிற்கு செல்கிறது. அங்கே ரோஸ்டர் என்ற முரட்டு நாயிடம் மாட்டிக்கொள்கிறது. அங்கிருந்து வெளியே வரும்போது அந்த முரட்டு நாயிடம் மேக்ஸ் நல்ல பெயரை வாங்குகிறதா என்பது. இரண்டாவது கதை சர்கஸ்காரனிடம் மாட்டிக்கொள்ளும் வெள்ளை புலியை ஓநாய்களை தாண்டி டெய்சி மற்றும் ஸ்னோபால் எப்படிக் காப்பாற்றுகின்றன என்பது. மூன்றாவது கதை மாக்ஸ் கிட்ஜெட் என்ற நாயிடம் கொடுத்து செல்லும் ஸ்வீட் பீ என்ற பொம்மையை பூனைகளிடம் பறிகொடுத்து அதை எப்படி மீட்கிறது என்பது. இந்த மூன்று கதைகளையும் இறுதியில் எவ்வாறு இணைகின்றன. ஒவ்வொரு கதையில் வரும் கதாபாத்திரங்களும் எங்கே எப்படி தொடர்புபடுத்தப்படுகின்றன என்பதை அட்டகாசமான நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறது இந்த சீக்ரெட் லைப் ஆப் பெட்ஸ் இரண்டாம் பாகம்.

தொய்வே இல்லாத திரைக்கதை, இடையிடையே நகைச்சுவை என செம்மையாக வந்துள்ளது இந்தப் படம். இசை, அனிமேசன், கதாபாத்திரங்கள் அமைப்பு என தொழில்நுட்ப வகையிலும் இது சிறந்த படம்.

பெரும்பாலும் அனிமேசன் படங்களின் கதைகள் ஒன்றாகத்தான் இருக்கும். அதை எப்படிக் கொடுக்கின்றோம் என்பதில்தான் அந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறுகிறது. இந்த மூன்று கதைகளும் பல படங்களில் பார்த்து அடித்து துவைத்த கதை தான். ஆனாலு, இடை இடையே அட்டகாசமாக நகைச்சுவையை நுழைத்து கொடுத்திருக்கிறார் கிரிஸ் ரோனௌட்… டிஸ்கிப்பில் மீ, மின்னியன்ஸ் படங்களின் இயக்குநர்.

வந்த உடனேயே பார்க்காமல் தவிர்த்தற்கு உண்மையில் வருந்துகிறேன். இனியும் தாமதிக்காமல் நீங்கள் பார்த்துவிடுங்கள்…

seithichurul

Trending

Exit mobile version