சினிமா செய்திகள்

விஜய் – யுவன் சந்திப்பின் பின்னணி என்ன? ரகசியத்தைக் கூறிய யுவன்!

Published

on

சில வாரங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தளபதி விஜய்யைச் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

விஜய்யை வைத்து யுவன் படம் தயாரிக்க உள்ளார். விஜய் படத்திற்கு யுவன் விரைவில் இசையமைக்க உள்ளார், அதற்கான சந்திப்பாகத் தான் இது இருக்கும் என்னவெல்லாம் செய்திகள் வெளியானது.

ஆனால் இது மரியாதை ரீதியான சந்திப்புதான் என யுவன் தரப்பு விளக்கம் அளித்து இருந்தது. ஆனால் அந்த சந்திப்பு எதற்காக நடந்தது என்ற ரகசியத்தை யுவன் திங்கட்கிழமை திரைத்துறையில் 25 வருடங்களை நிறைவு செய்தற்காகப் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

விஜய்யின் மேனேஜர் ஜகதீஷ், விஜய் மகன் யுவனிசம் என டீ-ஷர்ட் அணிந்து இருக்கும் புகைப்படத்தை தனக்கு அனுப்பி இருந்தார். அதை பார்த்துவிட்டு என்ன செய்வது என்றே எனக்குப் புரியவில்லை. உடனே ஃபெண்டாஸ்டிக் ப்ரோ என பதில் அனுப்பினேன்.

பின்னர் விஜய் சாரை சென்று சந்தித்த போது, எனது மகன் உங்களுடைய தீவிர ரசிகன். அது உங்களுக்கு தெரியவேண்டும் என்பதற்காக நான்தான் அனுப்பச் சொன்னேன் என கூறினார். ஆனால் அந்த படத்தை நான் சமூக வலைத்தளங்களில் பதிவிடவில்லை. அது எனக்காக எடுத்து அனுப்பப்பட்டது என்பதால் அதை நானே பார்த்து சந்தோசப்பட்டேன் என யுவன் ஷங்கர் ராஜா, விஜய் சந்திப்பு குறித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்த பேட்டியின் மூலம் விஜய், யுவன் சந்திப்பில் புதிய படம் குறித்த எந்த பேச்சும் நடைபெறவில்லை என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

காதல் பாடல்களுக்கு நன்றாக இசை அமைக்கிறீர்கள். கல்லூரி காலங்களில் காதல் மண்ணாக இருந்தீர்களா என பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்குப் பதில் அளித்த யுவன் நான் கல்லூரிக்கே செல்லவில்லை என கூறினார். பள்ளி காலங்களில் என கேட்ட போது பள்ளிக்குக் கூட நான் சரியாகப் போக மாட்டேன் என கூறினார். பெண்களை சைட் அடிப்பீர்களா? எனக் கேட்டதற்கு சைட் அடிப்பேன் என கூறினார்.

யுவன் திரைத்துறையில் 25 வருடங்களை நிறைவு செய்துள்ளதைக் கொண்டாடும் வகையில் இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

சில வருடங்களுக்கு முன்பு இந்தி தெரியாது போடா என்ற டீ-ஷர்ட் யுவன் அணிந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. அது பற்றிய கருத்தைக் கேட்டதற்கு, என இந்தி தெரியாது என்பதை நான் சொன்னேன். அதுபற்றி கருத்து கூற ஒன்றும் இல்லை என கூறினார்.

யுவன் திரைத்துறையில் 25 வருடங்களை நிறைவு செய்துள்ளார். உங்களுக்குப் பிடித்த பாடல்கள் என. யுவனை ஏன் உங்களுக்கு பிடிக்கும் என ஷேர் செய்து கருத்து தெரிவியுங்கள்.

seithichurul

Trending

Exit mobile version