வணிகம்

மியூச்சுவல் ஃபண்டில் உறுதியளிக்கும் வருமானம்.. விளம்பரங்களை நீக்க செபி உத்தரவு..!

Published

on

இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டு குறித்த விழிப்புணர்வு அவ்வப்போது ஏற்படுத்தப்பட்டு வரும் நிலயில் ஒவ்வொரு ஆண்டும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் பொது மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் மியூச்சுவல் ஃபண்டில் பொதுமக்கள் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காக ஏராளமான விளம்பரங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் மியூச்சுவல் ஃபண்டில் உறுதியான வருமானம் வரும் என்ற விளம்பரங்களை நீக்க செபி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த சில நாட்களாக பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தங்களது முதலீடுகளுக்கு உத்தரவாதமான வருமானம் கிடைக்கும் என்பது போன்ற விளம்பரங்களை வெளியிட்டு முதலீட்டு முதலீட்டாளர்களை கவர்ந்து வருவதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மியூச்சுவல் பண்ட நிறுவனங்களின் இந்த விளம்பரம் காரணமாக பலர் அதிக அளவில் முதலீடு செய்து வரும் நிலையில் செபி இது குறித்து புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

எந்த ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் அதன் விளம்பரங்களில் உத்தரவாதமான வருமானம் கிடைக்கும் என்பதை உறுதி அளிக்கக் கூடாது என்று செபி தெரிவித்துள்ளது. இது போன்ற தவறான விளம்பரங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் செபி கட்டுப்பாடு அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து மியூச்சுவல் ஃபண்ட் சங்கத்திற்கு அனுப்பிய கடிதத்தில் இந்த நடைமுறையை அனைத்து நிறுவனங்களும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவாதமான வருமானம் கிடைக்கும் என்ற விளம்பரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் செபி உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஒரு சில நிறுவனங்கள் துண்டு பிரசுரங்கள் மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் உறுதியான வருமானம் கிடைக்கும் என்று கூறியிருப்பதாகவும் இந்த துண்டு பிரசங்கங்களில் கொடுக்கப்பட்ட தகவல்களை நம்பி முதலீட்டாளர்கள் SIP மற்றும் SWP ஆகியவற்றில் முதலீடு செய்து வருகிறார்கள் என்றும் நிலையான வருமானத்தை பெறலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் முதலீடு செய்யும்போது உண்மையில் அது நடக்காமல் போக வாய்ப்பு இருப்பதால் அவர்கள் ஏமாற வாய்ப்பு இருப்பதாகவும் எனவே இது போன்ற விளம்பரங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் செபி உத்தரவிட்டுள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வருமானத்தை உறுதி செய்ய முடியாது என்றும் வருமானத்தை உறுதி செய்யும் உரிமை அவர்களுக்கு கிடையாது என்றும் செபி தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யும் SIP மற்றும் ஒருமுறை முதலீடு செய்து அதை ஒவ்வொரு மாதமும் திரும்ப பெறும் SWP ஆகியவற்றில் உறுதியான வருமானத்திற்கு எந்த விதமான உத்தரவாதமும் அளிக்க முடியாது என்றும் நீண்ட காலத்திற்கு இவை இரண்டுமே நல்ல வருமானத்தை தரும் என்றாலும் ரிஸ்க் உள்ள முதலீடு என்பதால் இதன் மூலம் உறுதியான வருமானம் கிடைக்கும் என்ற எந்தவித உத்தரவாதத்தையும் கொடுக்க முடியாது என்றும் செபி தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் உறுதியான வருமானம் தரும் விளம்பரங்களை நீக்குவதற்கு நடவடிக்கையை எடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version