தமிழ்நாடு

கமல் கட்சிக்கு டாடா காட்டிய கட்சி: அமமுகவுடன் ஒப்பந்தம்!

Published

on

வரும் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட எஸ்டிபிஐ கட்சி பேச்சுவார்த்தை நடத்த வந்த நிலையில் திடீரென அமமுக கூட்டணியில் இணைந்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் ஒரு பக்கம் தொகுதி பங்கீடு குறித்து பேசி வந்த எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் இன்னொரு பக்கம் அமமுக கட்சியுடனும் பேசி வந்தனர். இந்த நிலையில் அமமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து கூட்டணி ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆலந்தூர், ஆம்பூர், பாளையங்கோட்டை, திருச்சி மேற்கு, திருவாரூர், மத்திய மதுரை உள்ளிட்ட தொகுதிகள் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டதாகவும் எஸ்.டி.பி.ஐ அறிவித்துள்ளது. மேலும் பாஜகவை எதிர்க்கும் கட்சி என்பதால் எஸ்.டி.பி.ஐ கட்சி அமமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாகவும் அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version