இந்தியா

தடுப்பூசிக்கு கட்டுப்படாத புதிய வகை வைரஸ்: இந்தியாவில் பரவி வருவதால் பரபரப்பு!

Published

on

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசிக்கு கட்டுப்படாத புதிய வைரஸ் ஒன்று பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவி மிக அதிக சேதத்தை உருவாக்கி உள்ளது என்பதும் கொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாறி புது புது வைரஸ்களாக மாறியது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது ஸ்க்ரப் டைபஸ் என்னும் புதிய வகை வைரஸ் மக்களிடையே பரவி வருவது அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் மர்ம காய்ச்சல் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் பாதிக்கப்பட்டு ஒரு சிலர் உயிரிழந்தனர். இதனை அடுத்து இந்த காய்ச்சல் டெங்கு அல்லது வைரஸ் காய்ச்சலாக இருக்கலாம் என்று எதிர்பார்த்த நிலையில் பரிசோதனை செய்ததில் இது டெங்கு வைரஸ் காய்ச்சல் அல்ல என்றும் கொரோனா வைரஸ் உருமாறி ஸ்க்ரப் டைபஸ் என்ற புதிய வகை வைரஸ் ஆக மாறி உள்ளதால் ஏற்பட்ட காய்ச்சல் என்றும் தெரியவந்தது.

மதுரா மாவட்டத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் ஸ்க்ரப் டைபஸ் வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் அவர்களில் சிலர் குழந்தைகள் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஒருசில பாக்டீரியா மூலம் இந்த வைரஸ் உருவாகியிருக்கலாம் என்றும், இந்த ஸ்க்ரப் டைபஸ் வைரஸ் லார்வா என்னும் பூச்சிகள் கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு பரவி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தலைவலி, காய்ச்சல், உடல் வலி ஆகியவை இந்த நோயின் அறிகுறி என்றும் நிமோனியா மூளைக்காய்ச்சல் ஆகியவை பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த வைரசுக்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் ஏற்கனவே இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசி இதனை கட்டுப்படுத்தாது என்றும் கூறப்படுகிறது.

இந்தியா மட்டுமின்றி இந்தோனேசியா, சீனா, ஜப்பான் மற்றும் வடகிழக்கு ஆஸ்திரேலியாவிலும் இந்த வைரஸின் தாக்கம் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த வைரஸில் இருந்து பாதுகாக்க கொசுக்கள் மட்டும் லார்வா பூச்சிகள் கடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version