இந்தியா

வாகனம் வாங்கி 15 ஆண்டுகள் ஆகிவிட்டதா? இனி ஸ்கிராபேஜ் தான்: புதிய பாலிசி அமல்!

Published

on

மிகவும் பழைய வாகனங்கள் சாலையில் அனுமதிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படுவதை அடுத்து வாகனங்களுக்கான ஸ்கிராபேஜ் பாலிசி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளில் அந்த வாகனங்கள் அழிக்கப்படும் என்று அந்த பாலிசியில் குறிப்ப்டப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் தனிப்பட்ட வாகனங்கள் என்றால் 15 ஆண்டுகள், கமர்ஷியல் வாகனம் என்றால் 10 ஆண்டுகள் வரை காலம் நிர்ணயம் செய்யப்பட்டு அதன் பிறகு வாகனங்கள் ஸ்கிராபேஜ் செய்ய முடிவு செய்யப்படும். ஆனால் இந்தியாவில் அது போன்ற ஒரு பாலிசி இல்லாததால் 30 ஆண்டுகள், 50 ஆண்டுகள் பழைய வாகனங்களைக் கூட சாலைகளில் காண முடிகிறது. இதனால் சுற்றுச் சூழல் பாழ்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் கூட்டம் சமீபத்தில் நடந்ததை அடுத்து அதில் ஸ்கிராபேஜ் பாலிசி உறுதிசெய்யப்பட்டது. இதன்படி இந்தியாவில் தனிப்பட்ட வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கும், கமர்ஷியல் வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கு ஸ்கிராபேஜ் பாலிசி காலம் என விதிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் வாகனங்களில் ஸ்கிராபேஜ் செய்யப்படும் என்றும் இது இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதேநேரத்தில் ஸ்கிராபேஜ் செய்தவுடன் வழங்கப்படும் சான்றிதழை வைத்து வாகன உரிமையாளர்கள் பல்வேறு சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதிய வாகனம் வாங்கும்போது அந்த சான்றிதழை வைத்து சலுகை பெற்று கொள்ளலாம் என்றும், சாலை வரி மற்றும் இன்சூரன்ஸ் ஆகியவற்றில் குறிப்பிட்ட சதவீதம் சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2023 ஆம் ஆண்டு இந்த ஸ்கிராபேஜ் சோதனை அனைத்து வாகனங்களுக்கும் செய்யப்படும் என்றும், அதில் தகுதி பெறால வாகனங்கள் 2024ஆம் ஆண்டு ஸ்கிராபேஜ் செய்யப்படும் என்றும் என்றும் கூறப்படுவதால் 15 முதல் 20 ஆண்டுகள் மேலான வாகனங்கள் அனைத்தும் அழிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version