உலகம்

50 பயணிகளை மறந்துவிட்டு சென்ற விமானம்.. 10 நாட்களில் மீண்டும் அதேபோல் ஒரு சம்பவம்!

Published

on

கடத்த 10 நாட்களுக்கு முன் பெங்களூரு விமான நிலையத்தில் 50 பயணிகளை மறந்து விட்டு கோ ஃபர்ஸ்ட் விமானம் ஒன்று சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதேபோன்ற ஒரு நிகழ்வு மீண்டும் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் என்ற நகரில் இருந்து சிங்கப்பூர் கிளம்பிய விமானம் 32 பயணிகளை விட்டுவிட்டு புறப்பட்டது என்பதால் அந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் மன்னிப்பு கேட்டுள்ளது.

அமிர்தசரஸ் என்ற நகரில் உள்ள ஸ்ரீ குரு ராமதாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் ஜனவரி 18ஆம் தேதி அன்று இரவு 7:55 மணிக்கு புறப்பட திட்டமிட்டது, ஆனால் மோசமான மாநிலம் காரணமாக 4 மணிக்கே விமானம் புறப்பட முடிவு செய்தது. இதற்கு இதனை அடுத்து பயணிகள் அனைவருக்கும் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்பட்டது. 3.45க்கு சரியாக விமானம் கிளம்பும் என்று அந்த குறுந்தகவலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விமான பயணிகளுக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்த முகவர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு விமான நேரம் மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஆனால் ஒரே ஒரு முகவர் மட்டும் அவர் டிக்கெட் எடுத்துக் கொடுத்த பயணிகளுக்கு இந்த தகவலை தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக அந்த 32 பயணிகளும் விமானம் 7.55 மணிக்கு புறப்படும் என்று நினைத்து தாமதமாக விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது அவர்களுடைய விமானம் ஏற்கனவே கிளம்பி விட்டதாக அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து அந்த பயணிகள் விமான நிலையத்திலேயே போராட்ட ம் நடத்தியதை எடுத்து இது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

விமானம் புறப்படும் நேரம் குறித்து அனைத்து பயணிகளுக்கும் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது என்றும் மோசமான வானிலை காரணமாகவே இந்த நேரம் மாற்றம் செய்யப்பட்டதாகவும் விமான நேரமாற்றம் குறித்து விமான நிலைய ஆணையத்தின் முன் அனுமதியும் பெறப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரி கூறினார்.

ஒரே ஒரு முகவர் செய்த தவறுக்கு காரணமாக 32 பயணிகளும் விமானத்தில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இருப்பினும் ஸ்கூட் நிறுவனம் இதற்காக பயணிகளிடம் மன்னிப்பு கேட்பதோடு அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் வழங்க முயற்சி செய்து வருகிறோம் என்றும் ஸ்கூட் விமான நிறுவனத்தின் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் மாற்று விமானம் மூலம் 32 பயணிகள் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 32 பயணிகளுக்கு தகவல் அனுப்பாத முகவர் மீது நடவடிக்கை எடுக்க ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. 50 பயணிகளை பெங்களூரு விமானம் மறந்து விட்டு சென்ற 10 நாட்களில் கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version