இந்தியா

கொரோனா 3வது அலை எப்போது முடிவுக்கு வரும்: நல்ல செய்தி சொன்ன விஞ்ஞானிகள்!

Published

on

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை எப்போது முடிவுக்கு வரும் என்ற நல்ல செய்தியை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் ஆகிய இரண்டும் சேர்ந்து மூன்றாவது அலை வீசி வருகிறது என்பதும் இந்த அலையில் தினமும் லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா முதல் அலை, இரண்டாவது அலைபோல் மூன்றாவது அலையான ஒமிக்ரான் அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் ஒரு சில நாட்களில் குணமாகி வீடு திரும்புவார்கள் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி ப்ராமர் முகர்ஜி என்பவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது இந்தியாவில் தற்போது அனைத்து மாநிலங்களும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்றும் ஜனவரி இறுதியில் இது உச்சத்தை அடையும் என்றும் ஆனால் பிப்ரவரி மாதம் கொரோனா மூன்றாவது அலை இந்தியாவில் முடிவுக்கு வந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.

எனவே இன்னும் ஒரே மாதத்தில் இந்தியாவில் மூன்றாவது அலை முடிவுக்கு வந்துவிடும் என்ற விஞ்ஞானிகளின் தெரிவித்திருப்பது இந்திய மக்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி அதிகமாக அளவில் செலுத்தப்பட்டு இருப்பதால் மிக விரைவில் 3வது அலை முடிவுக்கு வந்துவிடும் என்றும் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனே செலுத்திக் கொண்டால் ஆபத்திலிருந்து தப்பித்து கொள்ளலாம் என்றும் அவர் கூறி உள்ளார். எனவே மக்கள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version