செய்திகள்

சுழற்சி முறை கட்!.. தினமும் பள்ளிகள் செயல்படும்.. தமிழக அரசு அறிவிப்பு…

Published

on

கடந்த வருடம் மார்ச் மாதம் முதலே கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் சரியாக செயல்படவில்லை. ஒரு கட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடத்தப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. வாரத்திற்கு 2 நாட்கள், ஒரு நாள் விட்டு ஒரு நாள் என வகுப்புகளுக்கு ஏற்றபடி பள்ளிகள் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் நாளை மறுநாளுடன் முடிவடைவதால் முதல்வர் ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். முடிவில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

குறிப்பாக, ஜனவரி 3ம் தேதி முதல் 6ம் வகுப்பு வரை 12ம் வகுப்பு வரை பள்ளிகள் சுழற்சி முறையின்றி வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரிகள், தொழில் நுட்ப பயிற்சி நிறுவனங்களும் சுழற்சி முறையின்றி செயல்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதையடுத்து, ஏறக்குறைய 2 வருடங்களாக பள்ளிகள் செயல்படாமல் மாணவ,மாணவிகள் வீட்டில் இருந்தது முடிவுக்கு வந்துள்ளது.

Trending

Exit mobile version