தமிழ்நாடு

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகிறதா? அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
ஏற்கனவே தமிழகத்தில் பள்ளிகளை மாணவர்களின் நலன் கருதி திறக்க வேண்டும் என ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூலை 16 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அவர்கள் அதிகரித்திருந்தார்

இதனை அடுத்து தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின் படி தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என தனியார் பள்ளி கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் டிசி இளங்கோ அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது ’விரைவில் 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்று கூறியுள்ளார். அரசு இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து விரைவில் பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுவையை போலவே தெலுங்கானாவிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது என்பதால் அதனை பின்பற்றி தமிழகத்திலும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட வேண்டுமென ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version