தமிழ்நாடு

ஜூலை 16 முதல் 9-12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: அரசு அறிவிப்பு!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன என்பதும் தெரிந்ததே.

அதேபோல் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு எழுதாமல் ஆல்பாஸ் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளி மாணவ மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கல்லூரி மாணவர் சேர்க்கை வரும் ஆகஸ்ட் 1முதல் தொடங்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையில் ஜூலை 16 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் முதல் கட்டமாக ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். அதன்பின்னர் நிலமையை அனுசரித்து பள்ளிகளில் உள்ள அனைத்து வகுப்புகளும் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து தமிழகத்திலும் கூடிய விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் மாணவர்களின் நலனை கருதி பள்ளிகளை திறக்கலாம் என ஆசிரியர் சங்கம் தமிழக அரசுக்கு வலியுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version