தமிழ்நாடு

கனமழையால் பள்ளிகள் விடுமுறை: எத்தனை மாவட்டங்களுக்கு விடுமுறை?

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் சென்னையை வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு,திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று மேலும் சில மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, வேலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் இன்னும் சில மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் இருந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தீபாவளி விடுமுறையாக 4 நாட்கள் விடப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version