தமிழ்நாடு

தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு இல்லை: அமைச்சர் அறிவிப்பு

Published

on

தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு இல்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுவையில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்தி வைக்கப்படுவதாக அமைச்சர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்

இந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் தற்போது பள்ளிகள் திறக்கும் திட்டம் இல்லை என கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். அக்டோபர் மாதம் மூன்றாவது அலையை பொருத்துதான் பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும் என்றும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தவும் முடிவு செய்து இருப்பதாக அமைச்சர் நமசிவாயம் கூறினார்

தற்போது தமிழகம் மற்றும் புதுவையில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து பள்ளிகளில் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்றும், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் பள்ளிகள் திறக்க இன்னும் பல மாதங்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழகம் மற்றும் புதுவையில் தற்போது ஆன்லைனில் வகுப்புக்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் சில மாதங்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version