தமிழ்நாடு

1 முதல் 8ஆம் வகுப்புக்கு பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு: மகிழ்ச்சியில் பெற்றோர்கள்! அமைச்சர்

Published

on

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்புக்கு பெற்றோர்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பதும் இதனை அடுத்து ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்பதும் கல்லூரிகளும் திறக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விரைவில் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளி திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் பெற்றோர்கள் மத்தியில் தற்போது வரை கொரோனா அச்சம் இருப்பதால் தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் இந்த அறிவிப்பு பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளுக்கான கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரே ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version