தமிழ்நாடு

ஒமிக்ரான் வைரஸால் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறையா? அமைச்சர் விளக்கம்!

Published

on

தென்னாப்பிரிக்கா, பிரேசில், ஹாங்காங் உள்ளிட்ட ஒருசில நாடுகளில் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவ வாய்ப்பு இருப்பதால் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படும் என்ற வதந்தி சமூகவலைதளத்தில் பரவி வரும் நிலையில் இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா உள்பட ஒருசில நாடுகளில் தற்போது ஒமிக்ரான் என்ற கொடூர வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் ஏற்கனவே 32 முறை உருமாறி உள்ள இந்த வைரஸ் இன்னும் அதிக மழை உருமாற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் பயன்படுத்தப்பட்டுள்ள கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்துமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவினால் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன என்பது குறிபிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவினால் மீண்டும் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படும் என இந்திய அளவில் ஒரு வதந்தி பரவி வருகிறது.

இது குறித்து விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், ஒமிக்ரான் வைரஸ் பரவல் அச்சுறுத்தலால் தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்ற தகவல் தவறானது என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version